கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக தோன்றியபோது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் தோன்றும் நடவடிக்கைகள் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உடைய நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் தடயவியல் போலீசார் இந்த அவர்கள் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 உடன் நிறைவுக்கு வந்த யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு இறுதி யுத்தத்தின்போது ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்,
அவர்களுடைய உறவுகள் இவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிலையில் இவ்வாறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அவர்கள் மத்தியில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது