விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்: தொல்.திருமாவளவன்

திமுக சார்பில் நாளை நடக்க உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இன்று கூடி விவாதித்தனர். இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மேலும் மக்கள் நல கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து வைகோவிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்காவிரி விவகாரம்திமுகதொல் திருமாவளவன்விடுதலை சிறுத்தைகள் கட்சி
Comments (0)
Add Comment