பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலர் ஞானசார தேரரை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்பமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பெரும்பாலும் இன்று பிற்பகல் ஞானசாரதேரர் விடுதலையாவார் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.