யாழில் படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள வலிவடக்கில் ஒரு பகுதி காணி இன்று விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்நிகழ்வு நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி இன்று (26) விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி இந்நிகழ்வில் பங்கெடுக்க ஆர்வமற்றிருந்த நிலையில் இந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.