சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து பூமியில் இருக்கும் விஞ்ஞானியுடன் வீரர் கைகுலுக்கினார்.
‘ஜாய் ஸ்டிக்’ முறை மூலம் இவர்கள் இருவரும் கைகுலுக்கி கொண்டனர். அதாவது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து டெர்ரி கைகொடுத்த சிக்னல் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் விண்கலத்துக்கு சென்றது. பின்னர் அது அங்கிருந்து அமெரிக்காவின் ஹுஸ்டனில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையம் மற்றும் அட்லாண்டிக் கடலை கடந்து நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு சென்றடைந்தது. இந்த சிக்னல் 0.8 வினாடிகளில் விண்வெளியில் இருந்து பூமியை வந்தடைந்தது.
வீரர் டெர்ரி விண்வெளியில் இருந்து கைகுலுக்கியதை உண்மையாக உணர்ந்தேன் என விஞ்ஞானி ஆண்ட்ரே தெரிவித்துள்ளார். அவர் டெலிரோபோடிக்ஸ் நிபுணராக பணிபுரிகிறார்.