விமல் கோத்தா ஜப்பானுக்கு திடீர் பயணம்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவும் எதிர்வரும் வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மஹிந்த ஆதரவு அணியால் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சியின் தலைவராக கோத்தபாய ராஜபக்சவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோத்தாவை  ஜப்பானிலுள்ள விமல் கட்சிகாரர்களிடம் அறிமுகப்படுத்தி வைப்பதே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து வீரவன்ச விலகும் போது ஜப்பானில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் சிலர் வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.  இவர்களுக்குள் ஜப்பான் சமன் எனப்படுபவர் வர்த்தக பிரதானியாகும்.
கோத்தபாய ராஜபக்ச புதிதாக அரசியலுக்கு வருவதாக காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்த போதிலும் பாதுகாப்பு செயலாளராக பதவி ஏற்ற சந்தர்ப்பத்திலே கோத்தபாய ராஜபக்ச அரசியல் வந்துவிட்டார்.
பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு தவறான முறையிலும் சட்டவிரோதமான முறையில், அரசியல் மேடைகளில் செயற்பட்டமையும் மக்கள் மறந்து விடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்கட்சிகோத்தபாயஜப்பான்பயணம்விமல் வீரவன்ச
Comments (0)
Add Comment