அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து புறப்பட்ட விமானம் நாடு வானில் சென்று கொண்டு இருந்த போது ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டு ,குறித்த பயணி வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பின்னர் கனடாவில் இருந்து விமானம் கிளம்ப தயாரானபோது குளிரால் விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு விமானத்தின் கதவு திறக்க முடியாமல் பனியில் உறைந்து போயுள்ளது.
இதையடுத்து பயணிகள் வெளியே வரமுடியாமல்கடும் குளிரில் நடுங்கிய படியே அமர்ந்திருந்த நிலையில், 16 மணி நேரம் கழித்து பயணிகளுக்கு காப்பி வழங்கப்பட்டு விமானம் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.