விமான நிலையத்தில் சிக்கி தவித்த நாமல்

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க முயற்சித்த போது, அதிகாரிகள் அதற்கு  தடை விதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நாமல் ராஜபக்ஷ தமது டுவிட்டர் தளத்தில்  இதனை  பதிவு செய்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாமல் ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருந்த நிலையில், மொஸ்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில்  அமெரிக்காவின் அதிகாரிகள்  அவரை விமானத்தில் ஏற அனுமதிக்க வேண்டாம் என , தங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக, எமிரேட்ஸ் எயார்லைன்ஸ், நாமல் ராஜபக்ஷவிடம்  கூறியுள்ளது.

எனினும்,  அதற்கான  சரியான காரணம் ஒன்றும் தனக்கு அளிக்கப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ   தமது டுவிட்டரில் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அதிகாரிகள்அமெரிக்காஅரசாங்கம்நாமல்விமானம்