ஜப்பான் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கிய போது ஓடுபாதையை விட்டு நழுவியதாக தெரியவந்துள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ்-ன் போயிங் 787 ரக விமானம் டெல்லியில் இருந்து 201 பயணிகளுடன் ஜப்பான் புறப்பட்டுள்ளது.
இன்று காலை ஜப்பானின் நரிடா ((Narita)) விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, குறித்த விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தில் இருந்து நழுவியபோது, சுதாரித்த விமானி விமானத்தை நிறுத்தியுள்ளார்.
இதன்காரணமாக பயணிகள் சில மணி நேரங்கள் விமானத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
அதன்பின் ஒவ்வொருவராக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு பின் பேருந்துகளில் பாதுகாப்புடன் விமான முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.