வியஜகலா மகேஸ்வரன் பண்டாரவன்னி மகாவித்தியாலயத்துக்கு விஜயம்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பண்டாரவன்னி மகாவித்தியாலயத்துக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்ககப்பட்ட துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இரண்டு சீருடை துணிக்கான வவுச்சர் மற்றும் காலனிக்கான  வவுச்சர் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்  முதற்கட்டமாக 530 மாணவர்களுக்கு  குறித்த வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,   மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிரியர்கள்ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி பாடசாலை அதிபர்கள்பெற்றோர்கள்பொதுமக்கள்மாணவர்கள்
Comments (0)
Add Comment