விவசாயிகளை சந்திக்காமல் மோடி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் – ராகுல் விமர்சனம்

விவசாயிகளை சந்திக்காமல், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அவரது சொந்த தொகுதியான அமேதியில், பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு மோடி ஆட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு 10 க்கு பூஜ்யம் மதிப்பெண் அளிப்பதாக கூறினார்.

ஆனால் பெரு நிறுவனங்களுக்கு பிரதமர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்காக 10 க்கு 10 மதிப்பெண்கள் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். அமேதியில் உணவுப் பூங்கா திட்டத்தை ரத்து செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பிரமதர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்தார்.

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசால் அமேதி மற்றும் அருகேயுள்ள 10 மாவட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

உத்திரபிரதேசம்காங்கிரஸ்காந்திசந்திப்புதலைவர்துணைதொகுதிபிரதமர்மாநிலம்ராகுல்விமர்சனம்விவசாயிகள்
Comments (0)
Add Comment