விவசாயிகள் தொடர் போராட்டம்

திருவெண்ணைநல்லூர் அருகே முறையாக பணம் வழங்காத நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நெல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. மணக்குப்பம், ஏனாதிமங்கலம், ஏமப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இங்கு விவசாயிகள் விற்பனைக்காக நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் கொண்டு வரும்  நெல்லுக்கு முறையான விலை கொடுக்காமல் அலைகழித்து வருவதாகவும்,  விவசாயிகளின் பணத்தை தருவதில் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். மூட்டை ஒன்றுக்கு 900 ரூபாய் வழங்க வேண்டிய நிலையில் 600 ரூபாய் மட்டுமே வழங்குவதாக தெரிவிக்கின்றனர். இதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அத்துடன் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   நதிகளை இணைக்க வேண்டும், விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டில்லியில் வரும் 23ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதற்காக டெல்லி புறப்பட்டு செல்ல வந்த அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டெல்லி பிரதமர் இல்லம், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த விவசாயிகள், தங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்

கூடம்திருவெண்ணைநல்லூர்நெல்பணம்போராட்டம்விற்பனைவிவசாயிகள்
Comments (0)
Add Comment