விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விதைகளை வாங்கலாம் : மத்திய அரசு

பழைய 500ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்தி விவசாயிகள் விதைகளை வாங்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவில், மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற வங்கிகளிலும் ஏ.டி.எம் மையங்களிலும் தினமும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். புதிய ரூபாய் நோட்டுக்கள் இன்னும் வராத நிலையில் மக்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பழைய 500ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்தி விவசாயிகள் விதைகளை வாங்கலாம் என்று தற்போது மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

500 ரூபாய் நோட்டுமத்திய நிதியமைச்சகம்விதைகள்விவசாயிகள்
Comments (0)
Add Comment