விஸ்வமடு மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கிய கல்வி ராஜாங்க அமைச்சர்…

இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பல்வேறு பாடசாலைகளுக்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கும் சென்ற  கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் இறுதியாக  விஸ்வமடு  மகாவித்தியாலயத்துக்கு சென்று அங்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

 முல்லைத்தீவு  வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராஜா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன்   கல்வி அமைச்சின் அதிகாரிகள்  புதுக்குடியிருப்பு  கோட்டக்கல்வி அதிகாரி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்    மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

இதேவேளை நிகழ்வின் இறுதியில் விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலைக்கும்  சென்று அங்கு குறைகளை கேட்டறிந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள்முல்லைத்தீவுவிஜயகலா மகேஸ்வரன்விஜயம்
Comments (0)
Add Comment