கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் தலித் சிறுவர்கள் 2 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பேட்டி அளித்திருந்த வி.கே. சிங், ”நாய் மீது கல் எரிந்து அது இறந்தாலும், அதற்கு பாஜக பொறுப்பு ஏற்க முடியமா? என்று கேட்டு இருந்தார். இவரது இந்தப் பேச்சு தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வி.கே. சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச டிஜிபி மற்றும் காசியாபாத் போலீஸ் எஸ்பிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பி.எல். புணியா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நவம்பர் 2 ஆம் தேதி இவர்கள் இருவரும் இந்த ஆணையத்தின் முன்பு தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.