வீட்டுத் திட்டத்திற்கான சாதகமான பதில் இன்றேல் சாகும்வரை உண்ணாவிரதம்: முன்னாள் போராளி

வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பாக சாதமான பதில் கிடைக்காவிடின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்துள்ளார்.

முன்னாள் போராளி ஒருவருக்கு பிரதேச செயலகத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து உரிமை கோரப்படாத கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்தே இவ்வீட்டுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டுத்திட்ட விவகாரத்தில் கிராம அலவலகர் மற்றும் பிரதேச செயலாளரினால் பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த முன்னாள் போராளி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, தனக்கான வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து ஒரு வாரத்திற்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் உள்நாட்டு அலுவலக அமைச்சு மற்றும் மாவட்ட செலயகத்தின் முன்னால் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Comments (0)
Add Comment