வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைதான பயங்கரவாதி ரயிலில் இருந்து தப்பினார்

வேலூரில் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ரயில் இருந்து தப்பினார். லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது பயங்கரவாதி தப்பித்துள்ளார்.

 வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் அ|ண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இந்நிலையில் லக்னோவில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை லக்னோ காவல்துறையிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறையினர் அழைத்து சென்ற நிலையிலேயே அவர் தப்பித்து சென்றுள்ளார்.

 வேலூர் மாவட்ட போலிஸார் கண்காணிப்பில் அழைத்து செல்லப்பட்ட பயங்கரவாதி  மத்திய பிரதேச இட்டார்சி ரயில் நிலையத்தில் ரயில் நின்ற நேரத்தில் அவர் தப்பித்து சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்ற பயங்கரவாதி சையது அகமது அலி திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

சையது அகமது அலிபயங்கரவாதிவெடிகுண்டு மிரட்டல்வேலூர்
Comments (0)
Add Comment