தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகபட்டிணம் ,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்குடியில் 11செ.மீட்டரும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் 10 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.