சிறிது நேரம் வைத்திருந்த பின் எடுக்கவும். பின்னர், மீண்டும் நனைத்து போடவும். இதுபோன்று 15 நமிடங்கள் வரை செய்யலாம். இவ்வாறு செய்துவர மயக்க நிலையில் இருந்து விடுபடலாம். அதிகளவு வெயிலால் மயக்க நிலை ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும். லேசான மயக்கம் என்றால் வெங்காய பசையை பயன்படுத்தி பத்தாக போடுவதால் மயக்கம், தலைவலி, காய்ச்சல் குறையும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை பின்பற்றலாம். வில்வத்தை பயன்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்கும் பானம் தயாரிக்கலாம். அரை ஸ்பூன் வில்வ பழம் அல்லது வில்வ இலை பசையை எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குளிர வைத்து காலை, மாலை குடிப்பதால் உடல் உஷ்ணம் குறையும்.
மயக்க நிலை தவிர்க்கப்படும். தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் மயக்க நிலை ஏற்படாது. புதினா, இஞ்சியை பயன்படுத்தி நீர் இழப்பை தடுக்கும் முறையை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: இஞ்சி, புதினா, எலுமிச்சை, பனங்கற்கண்டு. ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, ஒரு ஸ்பூன் புதினா சாறு, சிறிது எலுமிச்சை சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி குளிர வைத்து குடிக்கும்போது நீர் இழப்பை சமன்செய்யும். உடலுக்கு புத்துணர்வு தரும். குமட்டல், வாந்தியை தடுக்கும். உடலில் நீர் வற்றிபோகும் நிலையில் மயக்க ஏற்படும். இந்த சமயத்தில் இந்த பானம் பயனுள்ளதாக இருக்கிறது. வெயில் காலத்தில் அதிகமாக வியர்க்கும்.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் வெப்பத்தை குறைக்கும் முறையை பார்ப்போம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டி வேரை தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரில் மெல்லிய துணியை நனைத்து பிழிந்தபின் குழந்தையின் உடலை துடைக்க வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்கள் வரை செய்யவும். பெரியவர்களும் இந்த முறையை பின்பற்றலாம். இது, அதிக வியர்வை கட்டுப்படுத்தும். உடல் உஷ்ணத்தை குறைக்கும்.