வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகி 852 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், குண்டூர், பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்கள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதே போல தெலங்கானா மாநிலத்திலும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் ஆந்திரா உட்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், அனல்காற்று மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெல்லி, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஆயிரம்உயிரிழப்புதாக்கம்நாடுமாநிலம்முழுவதும்வெயில்
Comments (0)
Add Comment