வெயிலை சமாளிப்பது எப்படி?

கோடைகாலம் தொடங்கும் முன்னதாகவே தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில், வெயிலை சமாளிப்பது எப்படி?  கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டியெடுத்து வருகிறது.   பிப்ரவரியில் வெயில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கும் வெயில் படிப்படியாக குறைந்து பருவமழைக்கு வழிவகுக்கும் என்றும், இந்தாண்டு வெயில் அதிகரித்தால், கோடை மழை 130 மில்லி மீட்டர் முதல் 140 மில்லி மீட்டர் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  வெயில் அதிகரிப்பதால் உடல்சோர்வு, அம்மை, தலைவலி, மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறு ஆகிய நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இதனை தடுக்க அதிகளவு நீர் உட்கொள்ளுதல், இளநீர், தர்பூசணி போன்ற உணவு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  உணவு முறையோடு பருத்தி உடை அணிவது, இறுக்கமான உடையை தவிர்த்தல்,  தலைக்கு வெய்யில் தாக்காதவாறு தொப்பி அல்லது துணி சுற்றிகொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்

கோடைக்காலம்தமிழகம்தாக்கம்வெயில்
Comments (0)
Add Comment