வெறிச்சோடிய மட்டக்களப்பு செங்கலடி…

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வளம் செறிந்த புல்லுமலை  நிலத்தடி நீரை  மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நோக்கில் காத்தான்குடி தவிசாளரால் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில் அதற்கு  குறித்த தொழிற்சாலையை மூடுமாறு கோரி இன்று  மட்டக்களப்பு மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கிய நிர்வாக முடக்க போராட்டம் நடத்த மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
அந்தவகையில் இந்த  போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் தார்மீக ஆதரவை தெரிவித்திருந்த நிலையில்,  கதவடைப்பு   போராட்டம் பூரண வெற்றி அடைந்துள்ளது.
மட்டுநகர் படுவான்கரைபெருநிலம் எழுவான்கரை பகுதிகள் யாவும் வெறிச்சோடி காட்சியளிக்கிறதாகவும் கூறப்பட்டுகின்றது.
ஏறாவூர் பகுதியில் சில பேரூந்து சேவை காலையில் இடம்பெற்ற போதும் வீதிகளில் சிலர் தீயிட்டு எதிர்ப்பை தெரிவித்ததன் காரணமாக  பேருந்து சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு படுவான்கரை பெருநிலப்பகுதி பாடசாலை மாணவர்கள் எவரும் எந்த பாடசாலைகளுக்கும் செல்லவில்லை எனவும் குரிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு  சகல வர்தகசங்கங்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ள நிலையில்  திணைக்களங்களில் அன்றாட பணிகள் நடைபெற பொதுமக்கள் எவரும் செல்லவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை நோயாளர் நலன் கருதி இயங்கியபோதும் பொதுமக்களின்  வரவு குறைவாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கதவடைப்புசெங்கலடிபாடசாலைமட்டக்களப்புவர்த்தகநிலையங்கள்
Comments (0)
Add Comment