வெளிநாட்டிலிருந்து யாழிற்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி…

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு எழுவைதீவு 1ம் வட்டாரப்பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய நபரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

எழுவைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகைகள் திருடியமை மற்றும்,

தம்பாட்டி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இருந்து இலத்திரணியல் உபகரணங்களை திருடியமை தொடர்பில்  குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை  ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் டபள்யூ. வீ.ஏ.விக்குட் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

எழுவைதீவினை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில்,நீண்ட நாட்களின் பின் எழுவைதீவு சென்று  அங்கு வீட்டினை திருதத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தச்சு வேலைக்கு சென்ற  நபர்  குறித்த பெண்ணுடன் சகஜமாக பழகி அவர்  வைத்திருந்த பயணப்பைகள் வைக்கும் இடத்தினை அறிந்து கொண்டு நகைளை திருடியுள்ளார்.

இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து  குறித்த சந்தேகநபர் கைசெய்யப்பட்டுள்ளார்,

மேலும் அவரிடமிருந்து  6 கைபேசிகள், அம்பியர் 04, பாடல் ஒலிபரப்பி-02, மைக் உபகரணங்கள், கத்தி-01, என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஊர்காவற்றுரைகைதுசந்தேகநபர்பொலிஸார்
Comments (0)
Add Comment