வெளியேறு இராணுவமே வெளியேறு , எமது நிலம் எமக்கு வேண்டும் -கேப்பாப்புலவு மக்கள்…..

இன்றைய நாள் இலங்கயைினுடைய 71ஆவது சுதந்திர நாள் பரவலாக பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. முல்லைத்தீவு – கேப்பாப்புலவு  மக்கள் தமது நிலமீட்பினைக் கோரி தமது தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இந் நிலையில், 706ஆவது நாளான இன்று சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய அமைதிவழியிலான போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்

கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதுடன், எதிர்ப்புப் பதாதைகளும் போராட்ட இடத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதேவேளை போராட்டக் காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இப்போராட்டத்தில் கேப்பாபுலவு மக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள், உலகத்தமிழ் மாணவர் ஒன்றியமும் இணைந்த அமைப்புக்களும், ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள்    முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான,

து.ரவிகரன்,  ஆ.புவனேஸ்வரன்,  க.சிவநேசன்,  மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை நிகழ்த்தினர்.

எழுந்து பறந்த காடு எழும்பி கொழும்புக்கு ஓடு , விளைந்த நிலமடா பகையே வீணாய் இருப்பதேன் நீ சுமையே ,  வீதியில் எங்கள் கேள்வி விரைவினில் உனக்கு வேள்வி ,தமிழர்கள் வயிற்றில் அடி தறுதலை உனக்கு ஏன் கொடி,

இராணுவமே வெளியேறு ,நிலம் வேண்டும் அதுதான் எமது சுதந்திரம் ,எமது நிலம் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் ,

வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு , எமது நிலம் எமக்கு வேண்டும் என்றவாறான பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது நிலம் எமக்கு வேண்டும்விளைந்த நிலமடா பகையேவீணாய் இருப்பதேன் நீ சுமையேவெளியேறு இராணுவமே வெளியேறு
Comments (0)
Add Comment