வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு உதவிக்கரம் நீட்டிய ஹாட்லி கல்லூரி மாணவர்கள் …

வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு ஹாட்லி கல்லூரி மாணவர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

முத்தையன்கட்டு இடதுகரை கிராம சேவகர் திரு. ரஞ்சித்குமார் அவர்கள் தனது கிராமசேவகர்பகுதியில் உள்ள மக்களுக்கு கொட்டகை அமைப்பதற்கு. தறப்பால். நுளம்பு வலை. போன்ற பொருட்கள் அவசியம் தேவையென கூறியுள்ளார்.

இந்நிலையில் முத்தையன்கட்டு. கனகரத்தினபுரப்பகுதி மக்கள் 100 குடும்பத்திற்கான உலர்உணவுப்பொருட்கள், பாய், நுளம்புத்திரி ஆகிய பொருட்களை கனகரத்தினபுர மக்களுக்கு கொடுப்பதற்காக இடது கரை கிராமசேவகரிடம்  ஹாட்லி கல்லூரி மாணவர்கள் கையளித்துள்ளார்கள்.

இதேவேளை ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர்புரப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிப்புற்று பாடசாலையில் இருக்கும் 43 குடும்பங்களுக்கு உலர்உணவு பாய் உடைகள் என்பன ஹாட்லி கல்லூரி மாணவர்களால்  வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உடைகள்உலர்உணவுபாய்ஹாட்லி கல்லூரி மாணவர்கள்
Comments (0)
Add Comment