வட மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு உதவிபுரியுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதிக்கபப்ட்ட மக்களிற்கு புலம்பெயர் தமிழ் மக்களும், கொழும்பு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளையும் அடுத்த சில நாட்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களையும் வழங்கி உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் உடை ஆகியவற்றை வழங்கும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் கூட்டணி மேற்கொண்டுள்ளதாகவும்,
அதேபோல வேறு பல அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதால் தமக்கு வசதியான வழிகளில் தமது உதவிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..