அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவடத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு பெரியகல்லாறு விளையாட்டு கழகத்தினர் உலருணவு பொதிகளை கொண்டுவந்து கையளித்துள்ளனர்
குறித்த பகுதி கிராம அலுவலர் மற்றும் விளையாட்டு கழக தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேரடியாக பொருட்களை எடுத்துவந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்தனர்.