முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
லண்டன் சிவன் கோவில் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களின் வழிகாட்டலில் ஒளிரும் வாழ்வு அமைப்பினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது
வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் வைத்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார் .