கெக்கிராவ – இபலோகம, புஞ்சிகுளம் பிரதேசத்தில் வைத்து, வெள்ளை வான் ஒன்றில் வந்த மர்மநபர்கள், குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 9 பேர் அடங்கிய குழுவினராலேயே, குறித்த நபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவினர், பண்டாரவளை பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.