சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. மேலும், 29 பேர் காயமடைந்துள்ளதுடன் 118 பேர் காணமல் போயுள்ளனர். சுமார் 400 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 57,590 குடும்பங்களைச் சேரந்த 242,927 பேர் இடம்பெயர்ந்து 398 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.