வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.200-க்கு புதிய சிலிண்டர்: மத்திய அரசு முடிவு

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டருக்கு பதிலாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு ரூ.200-க்கும், மற்றவர்களுக்கு ரூ.1,200-க்கும் மாற்று சிலிண்டர் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அண்மையில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் இழந்துபோன எரிவாயு ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் தருவதற்கான தனி மையங்கள் நடத்தப்படும்.

அதில், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டருக்குப் பதிலாக வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினருக்கும் ஒரு சிலிண்டருக்கு ரூ.200-க்கும், மற்றவர்களுக்கு சிலிண்டர் உற்பத்திச் செலவான ரூ.1200-க்கும் அளிக்கலாம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து எண்ணெய், எரிவாயு வர்த்தக நிறுவன அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல், வழிமுறைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

இந்த நிலையில், மாற்று சிலிண்டர்கள் வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளிப்பு: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நகல் ஆவணங்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் முகாம் டிசம்பர் 14-ஆம் தேதியன்றே 95-க்கும் மேற்பட்டோரும், சனிக்கிழமையன்று மட்டும் 77 பேரும் என 200-க்கும் மேற்பட்டோர் கணக்குப் புத்தகம், சிலிண்டர் இணைப்புக்கான ஆவணச் சான்று ஆகியவற்றின் நகல்களையும், மாற்று சிலிண்டர்களைக் கேட்டும் மனு அளித்துள்ளனர்.

எரிவாயுபுதிய சிலிண்டர்பொன்.ராதாகிருஷ்ணன்மத்திய அரசுவெள்ள பாதிப்பு
Comments (0)
Add Comment