நேற்றிரவு விமானத்தில் அவர் சென்னை வந்தார். எம்.ஆர்.சி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று கடனுதவி வழங்குகிறார். பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
மழை வெள்ள சேதம் பற்றியும், மத்திய அரசிடமிருந்து உடனடியாக தேவைப்படும் உதவிகள் குறித்தும் ஜெட்லியிடம் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.