வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்படுகின்றது – வனத்துறை

வேடந்தாங்கல் பறவைகள் சரனாலயம் நாளை மாலை 6 மணி முதல் மூடப்படுவதாக வனதுறையினர் அறிவித்துள்ளனர் காஞ்சிபுரம் மவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள உலக பிரசிதிப்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரனாலயம் உள்ளது. இந்த சரனாலயம் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் வேடந்தாங்கல் ஏரி முழுமையாக நிறம்பியது இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான பறவைகள் சரனாலயத்திற்கு வந்து குவிந்தன.

இதனால் பொதுமக்கள் பார்வைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. தற்போது நீர் வரத்து இல்லாததால் பறவைகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்றன குறைவான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் நாளை மாலை 6 மணி முதல் பராமரிப்பு பணிக்காக சரணாலயம் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீண்டும் இந்த ஆண்டு அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தெரிவித்தனர்.

அறிவிப்புசரணாலயம்பறவைகள்மூடல்வனத்துறைவேடந்தாங்கல்
Comments (0)
Add Comment