முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (07.05.19 ) மணல் அகழ்வினை கட்டுப்படுத்த பொலீஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் உள்ள கள்ளியடி,மற்றும் உடையார் கட்டுபாவாடைக்கல்லாற்று பகுதிகளில் மணல் ஏற்றிசென்ற உழவு இயந்திரங்களை சோதனையிட்டுள்ளார்கள் .
இதன்போது வேறு இடத்தின் அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்ற 3 உழவியந்திரங்களையும் சாரதிகளையும் கைதுசெய்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மணல் ஏற்றிசென்ற டிப்பர்களை பரிசோதனை செய்தபோது அவையும் வேறு இடத்து மணல் அனுமதி பத்திரத்தினை பயன்படுத் மணல் ஏற்றுசென்றமை தெரியவந்துள்ளது.
அவர்களையும் கைதுசெய்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இதில் கைதான் ஆறு சாரதிகளும் பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றிய உழவு இயந்திரம்,மற்றம் டிப்பர்களை எதிர்வரும் 10.05.19 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.