வேலூரில் தோல் தொழிற்சாலைகள் இயங்க தடை

வேலூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாக தடை விதித்து மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் இந்த ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றியதால் அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இயங்கும் 120 தோல் தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாக தடை விதிப்பதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மலையாண்டி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இயங்குதல்கட்டுப்பாட்டுதடைதற்காலிகதொழிற்சாலைதோல்மாசுமாவட்டம்வாரியம்வேலூர்
Comments (0)
Add Comment