வேலூர் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டி இடிந்ததில் 9 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டி இடிந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் பல தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன.

நேற்று நள்ளிரவு கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நிறுவனத்தின் தொட்டி திடீரென்று வெடித்து இடிந்து விழுந்தது. அப்போது வெள்ளம் போல பெருக்கெடுத்த கழிவுநீர் அருகிலிருந்த மற்றொரு சுத்திகரிப்பு ஆலைக்குள் புகுந்தது.

அப்போது தொழிற்சாலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கழிவுநீரில் மூழ்கினர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் காவலாளி சம்பத் தவிர மற்ற அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பொக்கலைன் இயந்திரம் மூலம் உடல்கள் மீட்கப்பட்டு வாலாஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், உடல்கள் உள்ளதா என தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடிவுஉயிரிழப்புகழிவுசிப்காட்சோகம்தொட்டிதொழிலாளர்தொழில்சாலைதோல்நீர்பலிமாவட்டம்ராணிப்பேட்டவேலூர்
Comments (0)
Add Comment