வேல்முருகனை ஓரங்கட்டிய ஜெ

அதிமுக கட்சியில் கணிசமான இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவற்றுக்கு ஒரு இடம்கூட கிடைக்காததால் அக்கட்சிகளின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாகியுள்ளது.  

நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அதிமுகவிற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக்கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற வற்றுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கப்படவில்லை.   இதனால் அக்கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் கட்சியின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து அதன் நிறுவன தலைவர் வேல்முருகன்  அறிவிக்கிறார்.   கடந்த முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்று தொகுதி ஒதுக்கீடு பெற்ற  பார்வர்ட் பிளாக் கட்சிக்கு இந்த முறை எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து மதுரையில் உள்ள பார்வர்ட் பிளாக் கட்சியின் எம்.எல்.ஏ கதிரவன் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் அவசர கூட்டம் நடத்தினர்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், அதிமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 4 இடங்கள் கேட்டு ஒரு இடம்கூட கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுகஆதரவுகட்சிகருத்துசீட்தமிழகம்பட்டியல்வாழ்வுரிமை
Comments (0)
Add Comment