மதுரை மாவட்ட திருமங்கலத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் திருமங்கலம் நகராட்சித் தலைவர் ராஜேந்திரன் ம.தி.மு.க. கட்சித் தலைவர் வைக்கோ அவர்களின் கைகளை வெட்டுவேன் எனத் திமிராகப் பேசியதால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 2ம் திகதி திருமங்கலத்தில் தி.மு.க. கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜேந்திரன் என்பவரும் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாகவும், ம.தி.மு.க. தலைவர் வைகோ தொடர்பாகவும் ஆபாசமாகப் பேசியதால் கூட் டத்தில் பரபரப்புத் தோன்றியது. மேலும் அவர் வைகோ தொடர்பில் பேசும்போது, வைகோ பணத்திற்கு விலைபோகக்கூடிய வரென்றும், அவர் தன்னைத் தானே உயர்த்திகொண்டு போகும் தலைவரென்றும் கூறிய அவர் வைகோ தி.மு.க. பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதியற்றவர்.
அவர் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு திருமங்கலம் வழியாகச் செல்லும்போது இடையில் மறித்து அவரது கைகளை வெட்டுவோம் என மிரட்டலும் விடுத்தார். ராஜேந்திரனின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் நின்ற ம.தி.மு.க தொண்டர் ஒருவர் பொலிசுக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.