வைக்கோ விடுதலைப் புலி உறுப்பினரென திருப்பி அனுப்பியது மலேசியா!

மதிமுக பொதுச் செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூர் விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வைக்கோவிடம் பலமணிநேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாகவும், இவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விடுதலைப்புலி உறுப்பினராகையால் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள, மலேசியாவின் பினாங் மாநில பிரதி முதல்வர் ராமசாமியின், மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காகவே வைகோ மலேசியா சென்றிருந்தார்.

இதனையடுத்து வைக்கோ இன்று சென்னையை வந்தடைந்தள்ளார்.

கோலாலம்பூர்மலேசியாவைகோ
Comments (0)
Add Comment