’ஷெங்ஸோ 11’ விண்வெளிக்கு செல்லத்தயார்

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இதனையடுத்து, ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ’ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது.

’ஷெங்ஸோ 11’ விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் இரண்டு விஞ்ஞானிகளும் சுமார் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, நாளை காலை 7.30 மணியளவில் ’ஷெங்ஸோ 11’ விண்கலத்தை விண்வெளியில் செலுத்தும் ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆய்வுக்கு செல்லும் விஞ்ஞானிகள் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு மையத்தின் திட்ட அதிகாரி உ பிங் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

’ஷெங்ஸோ 11’ஆய்வுசீனாதிட்டம்நிரந்தரம்விஞ்ஞானிகள்விண்வெளி
Comments (0)
Add Comment