ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் விலகியுள்ளது

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கனிமொழி கூறிய யோசனையால் காங்கிரஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமையை சந்தித்துள்ளனர்.

இதனால் கட்சியின் தலைமையும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் கட்சியின் சின்னத்தைப் பெறுவதற்கான ‘பி பார்ம்’ படிவத்தை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தன் உதவியாளர் மூலம் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு கொடுத்தனுப்பியுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த கொண்ட தி.மு.க ராஜ்யசபா எம்.பி கனிமொழி, உடனே காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்குள்ள காங்கிரஸ் தலைவர் ஒருவரை சந்தித்துள்ளார்.

அந்த தலைவரிடம் கனிமொழி கூறியதாவது, அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் திமுக பக்கம் போய்விடக் கூடாது என்பதால் தான், பாஜக தரப்பில் ஸ்ரீரங்கத்தில் வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி, அது மதவாத சக்திகளின் எண்ணங்களுக்கு சாதகமாகி விடும்.

எனவே மதச்சார்பற்ற சக்திகள் இந்த தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை நியமிக்காமல், திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு செல்ல, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

சோனியாவின் உத்தரவு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு வந்து சேர, அவர் ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் காங்கிரசார் ஓட்டுகள் திமுகவுக்குத் தான் கிடைக்கும் என திமுகவினர் உற்சாகமாகி உள்ளனர்.

இடைத்தேர்தல்கட்சிகனிமொழிகாங்கிரஸ்காந்திசோனியாதலைமைதிருச்சிபோட்டிமாவட்டம்யோசனைவிலகல்ஸ்ரீரங்கம்
Comments (0)
Add Comment