ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றத்தை தொடர்ந்து அக்கட்சியினர் ஸ்ரீரங்கத்திலும், சென்னை போயஸ் கார்டனிலும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளனர். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 25 சுயேச்சைகளுடன், களத்தில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே அ.தி.மு.க. முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி ஶ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பும், வாக்கு எண்ணும் மையத்தின் முன்பும் அ.தி.மு.க தொண்டர்கள் வெடிவெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக குதூகலமாக உள்ளனர். வெற்றிக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் அ.தி.மு.க.வினர் வலம் வருகின்றார்கள்.

அதிமுகஇடைத்தேர்தல்கட்சிகார்டன்கொண்டாட்டம்சென்னைதிமுகபட்டாசுபோயஸ்வெற்றிஶ்ரீரங்கம்
Comments (0)
Add Comment