ஸ்ரீலங்கா அரசாங்கத்தை நெருங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போடும் நிகழ்வுகள் கொழும்பு அரசியலில் இடம்பெறுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடாக இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று கொழும்பு செல்
கின்றார்.
கின்றார்.
இதேவேளை அடுத்த மாதம் இந்திய வெளியுறவு செயலாளர் சுஷ்மா சுவராஜ் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது செயலாளர் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா வரலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த சில மாதங்களின் முன்னர் பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று ஸ்ரீலங்காவில் நங்கூரமிட்டப்பட்ட சமயத்தில் இந்தியா அதற்கு அதிருப்தியை இலங்கைக்கு வெளிப்படுத்தியிருந்ததாக டில்லி தகவல்கள் தெரிவித்தன.
குறித்த காலப்பகுதியில் இந்திய இராணுவத் தளபதி ஸ்ரீலங்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த நிலையிலேயே பாகிஸ்தான் கப்பல் ஸ்ரீலங்காவில் நங்கூரமிடப்பட்டிருந்தது.
இதேவேளை பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்களை ஸ்ரீலங்கா பெறுகின்றது என்ற செய்திகளும் ஒரு புறம் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் கொடிகளுடன் கொழும்பு மாநகரம் காட்சி அளிக்கின்றது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை வரவேற்கவே இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கு அலரி மாளிகையில் விசேட மதிய விருந்தும் வைக்கப்படுகின்றது. அத்துடன் அவர் ஸ்ரீலங்காவுடன் மேற்கொள்ளும் சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடுகிறார்.
இதேவேளை ஸ்ரீலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாக உறவு நிலவுவதாகவும் அது பாரம்பரியம் மிக்கது என்றும் இலங்கையின் அரச நாளிதழ்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளையும் அணைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் அதன் ஊடாக சர்வதேச தடத்தில் ஆதரவு கிட்டும் என்றும் ஸ்ரீலங்கா நம்புவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஸ்ரீலங்காவை நெருங்குவதில் தமது செல்வாக்கை தக்க வைப்பதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாகவும் அரசியல் அவதானிகள் மதிப்பிடுகின்றனர்.