அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசினர். இதன்போதே, ஜனாதிபதி இந்தக் கோரி க்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட, அமெரிக்க நாடாளுமன்ற நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட், இலங்கை அரசாங்கம் ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துள்ள எடுத்து ள்ள நடவடிக்கைகளையிட்டு அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்திக்கான சவால்மிக்க இலங்கையின் பயணத்தில் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பி ட்டார்.
அமெரிக்காவுக்கும் இங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்ப தாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த,இலங்கை படையினருக்கான அமெரிக்காவின் பயிற்சி வாய்ப்புகள் மீண்டும் வழ ங்கப்பட்டுள்ளமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, கடற்படையினருக்கான அமெரிக்காவின் பயிற்சிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அனைத்துலக கப்பல் போக்குவரத்து பாதையில் – புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் இலங்கை உள்ளதால், தேசிய பாதுகாப்பில் மாத்திரமன்றி பிராந்தியப் பாதுகாப்பிலும் இலங்கைக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இலங்கை பாரிய அனைத்துலக முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாது காப்பு தொடர்பில் கவனம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.