ஸ்ரீ கடற்படை அட்டுழியம்! மீனவர்களின் வலைகளை வெட்டி விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 294 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 100-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுற்றி வளைத்தனர். 

பின்னர், மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட அவர்கள், படகிலிருந்த மீனவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர். பின்னர், இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதை அறிந்த மீனவர்கள், சேதப்படுத்தப்பட்ட வலைகளுடன் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் மீன்களைப் பிடித்து கொண்டு நேற்று கரை திரும்பினர்.

அட்டுழியம்அராஜகம்இராமேஸ்வரம்கடற்படைமீனவர்கள்மீன்மீன்பிடிவலைஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment