ஸ்ரீ கொத்தவை பிரதான மூன்று பிரிவுகளாக பிரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவை பிரதான மூன்று பிரிவுகளாக பிரித்து அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் க்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தொலைத்தொடர்புகள் மற்றும் பிரசார பிரிவு, அங்கத்தவர்களை இணைத்து கொள்ளல், திட்டமிடல் ஆகிய செயற்பாடுகளை துரிதப்படுத்த மூன்று பேருக்கு அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக புதிய செயலாளர்கள் மூன்று பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும்  அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிதொலைத்தொடர்புகள்பிரசார பிரிவுஸ்ரீ கொத்தா
Comments (0)
Add Comment