ஹட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இன்று காலை தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன், வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து ஹட்டன் பொலிஸார், ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து, சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கபட்டவர்களில் 108 பேர் தற்காலிகமாக போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியகிடைத்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.