10 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து உலக சாதனை படைக்க பாஜக முயற்சி

பாரதீய ஜனதா கட்சியானது மக்களவை தேர்தல் மற்றும் 3 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற நிலையில், சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி செய்த உலக சாதனையை முறியடிக்கும் வகையில் 10 கோடி புதிய உறுப்பினர்களை வருகிற மார்ச் இறுதிக்குள் கட்சியில் சேர்த்து சாதனை படைப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

உலகசாதனை

சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து உலக சாதனை படைத்துள்ளது.  எனவே, பாரதீய ஜனதா கட்சி இதனை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

உறுப்பினர்சேர்க்கை

இது குறித்து, உறுப்பினர் சேர்ப்பு பிரசார தேசிய தலைவரும் மற்றும் கட்சியின் துணை தலைவருமான தினேஷ் ஷர்மா கூறுகையில், கடந்த வருடம் நவம்பரில் உறுப்பினர் சேர்க்கைக்கான பணி தொடங்கியது.  புதிதாக 10 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான இலக்கை அடைவதற்காக வருகிற மார்ச் 31ந்தேதி வரை இந்த பணி தொடரும் என்றார்.

புதியஉறுப்பினர்கள்

கட்சியில் சேர்வது தொடர்பான ஆர்வம் மக்களிடையே அதிகமாக காணப்படுவதால் நாடு முழுவதும் 2.3 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதில், கடந்த 2 மாதங்களில் உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 77 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் 53 ஆயிரத்து 201 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று ஷர்மா கூறியுள்ளார்.

பிரதமரின்நல்லஆட்சி

பாரதீய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்பான மக்களிடம் காணப்படும் ஆர்வம் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல ஆட்சி மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது என்றும் ஷர்மா கூறியுள்ளார்.

உலக சாதனைகட்சிசீனாதேர்தல்பாஜகமக்களவைமாநிலம்வெற்றி
Comments (0)
Add Comment