10-ம் வகுப்புத் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் மண்டல அரசுத்தேர்வுகள் துணை இயக்குநர் இரா.வீரக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிச.24 ஆம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது தனித்தேர்வர்கள் நலன் கருதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனித்தேர்வர்கள் டிச.29 ஆம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்கால நீட்டிப்புதனித்தேர்வர்கள்பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு
Comments (0)
Add Comment