10 – 12 ஆவது வகுப்பு தேர்வுகள் ஆரம்பம்

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12-வது வகுப்பு மற்றும் 10-வது வகுப்பு தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன.

ஆங்கில பரீட்சையுடன் தொடங்கும் 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 12-வது வகுப்பு தேர்வை 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.  10-வது வகுப்பு தேர்வு இன்று டைனமிக் ரீடெய்ல் என்ற பாடத்துடன் தொடங்கி மார்ச் 28-ந்தேதி முடிவடைகிறது.

இந்த தேர்வை 14 லட்சத்து 99 ஆயிரத்து 122 பேர் எழுதுகிறார்கள்.  தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகம், அந்தமான் – நிக்கோபார், கோவா அடங்கிய சென்னை மண்டலத்தில் 12-வது வகுப்பு தேர்வை 56 ஆயிரத்து 948 பேர் எழுதுகிறார்கள். 10-வது வகுப்பு தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரத்து 309 பேர் எழுதுகிறார்கள். மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத முடியாது. அவர்கள் வேறு பள்ளியில் தான் தேர்வு எழுத வேண்டும்.

ஆரம்பம்சிபிஎஸ்இதேர்வுபள்ளிகள்பாடத்திட்டம்மத்தியகல்விவகுப்பு
Comments (0)
Add Comment